கள் குடியுங்கள், டாஸ்மாக் வேண்டாம் - பாஜக தலைவர் அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை ஆனைகட்டி பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:- ”குடியினால் எல்லோருக்கும் பிரச்சனை ஏற்படும். கள் குடியுங்கள், டாஸ்மாக் வேண்டாம். ஒரு டாஸ்மாக் கடையை அல்ல, எல்லா டாஸ்மாக் கடையையும் அகற்ற அரசியலுக்கு வந்துள்ளோம். டெல்லிக்கு போற ஒரே வண்டி இந்த வண்டிதான், மற்றவை எல்லாம் லோக்கல் வண்டி. 

பழங்குடியின மக்களின் பாதுகாவலனாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். டாஸ்மாக் சரக்கை குடிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கிய அவர், குடிக்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

annamalai speech in covai election campaighn


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->