தமிழகத்தில் மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை - அண்ணாமலை ஆவேசம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடிக் கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வானகரத்தில் இன்று பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும், தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”சுவையான மாம்பழம் இருக்கும் மரத்தில் கல்லடி படத்தான் செய்யும். தமிழகத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொலை, கொள்ளை என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது. சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. கள்ளச்சாராயம் என்பது ஆறு போல ஓடி கொண்டிருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai press meet after meeting in chennai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->