வந்த வேகத்தில் U turn.. தமிழ் வழிக் கல்வி ரத்து வாபஸ்.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ் வழிக் கல்வி ரத்து என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகள் தற்காலிகமாக நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ் வழியில் பயில மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்க்கையானது வெகுவாக குறைந்து காணப்பட்டது. 

இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதால் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், தூத்துக்குடி, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட தமிழ் வழி கல்வி தற்காலிக நிறுத்தப்பட்டது என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். மேலும் இந்த கல்வியாண்டில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி படிப்புகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna university vice chancellor withdrawal tamil medium cancellation notice


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->