ஆறுமுகம் தொண்டைமான் மறைவு.. அன்புமணி இராமதாசு, டிடிவி தினகரன் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இலங்கை தமிழ் அமைச்சரும், இலங்கை காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஆறுமுகம் தொண்டமான் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஆறுமுகம் தொண்டமான் இலங்கையில் மலையகத் தமிழர்களின் முகமாக திகழ்ந்தவர். மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடியவரும், மலையகத் தமிழர்களின் தந்தை என்று போற்றப்படுபவருமான சவுமிய மூர்த்தியின் பெயரனான ஆறுமுகம் தொண்டமான் இலங்கை அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக திகழ்ந்தவர். தமிழர்களின் கலை & கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்; குரல் கொடுத்தவர்.

ஏற்காடு மாண்ட்ஃபோர்டு பள்ளியில் எனக்கு சில ஆண்டுகள் மூத்த மாணவரும், எனது நண்பரும் ஆவார்.  ஆறுமுகம் தொண்டமானின் மறைவு இலங்கை மலையகத் தமிழர்களுக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்..

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவு செய்துள்ள ட்விட்டில், " இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சி துறை அமைச்சருமான மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் திடீரென காலமான செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த தொண்டமான் அவர்களின் மறைவு இலங்கை மலையகத் தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது மறைவால் வாடும் இலங்கை ஊவா மாகாண அமைச்சர், எனது அன்பு நண்பர் மாண்புமிகு. செந்தில் தொண்டமான் மற்றும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மலையகத் தமிழ் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தனது இரங்கலை கூறியுள்ளார்..

இதனைப்போன்று ஆறுமுகம் தொண்டைமான் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss and TTV Dhinakaran regret about Aarumugam Thondaiman


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal