என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய அமமுக.. டிடிவி தினகரன் போடும் கணக்கு! விஜயுடன் சேரும் டிடிவி-ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக–அதிமுக கூட்டணி வலுப்பெறும் தருணத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளதால், NDA-வில் அதிருப்தி மற்றும் குழப்ப நிலை உருவாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் தனித்தனியாக போட்டியிட்டிருந்தன. ஆனால் எதிர்பார்த்த வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனால், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் மீண்டும் கைகோர்த்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகளை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், அதே நேரத்தில் NDA கூட்டணியின் உட்பகுதியில் பிளவு நிலவி வருகிறது. OPS அணியினர் ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், இப்போது அமமுகவும் NDA விலகுவதாக அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,“அதிமுக ஒன்றிணைவதற்காக அமித்ஷா எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி அமமுக இல்லை. எங்கள் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து டிசம்பரில் அறிவிப்போம்,”
என்று தெரிவித்துள்ளார்.

இதனுடன், கடந்த சில நாட்களாகவே பரவியிருந்த “டிடிவி தினகரன் NDA-யிலிருந்து விலகலாம்” என்ற தகவல்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில்,“அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்னும் NDA கூட்டணியில்தான் உள்ளார். அவர் கூட்டணியில் தொடர்கிறார், சந்தேகமே வேண்டாம்,”
என்று வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் தினகரன் இன்று வெளிப்படையாக NDA விலகுவதாக அறிவித்ததால், பாஜக–அதிமுக கூட்டணிக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது.

ஓ. பன்னீர்செல்வம் அணியின் வெளியேறல், அதன்பின் அமமுக விலகல் என NDA கூட்டணியில் பிளவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இதனால், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக–அதிமுக கூட்டணி தனது வலிமையை நிலைநிறுத்த சிரமம் சந்திக்க நேரிடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

 இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் தினகரன் அறிவிக்க உள்ள புதிய கூட்டணி நிலைப்பாடு, தமிழக அரசியலுக்கு எந்த வகையான புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK leaves NDA alliance TTV Dhinakaran is making a calculation TTV OPS joins Vijay


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->