#Breaking: தேமுதிக - அமமுக உடன்பாடு.. 60 தொகுதிகளில் தேமுதிக போட்டி.. அமமுக வேட்பாளருக்கு ஆப்பு.! - Seithipunal
Seithipunal


அமமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகி 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 60 தொகுதிகளுக்கு அமைமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அமமுக தலைமை தெரிவித்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " 06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் 60 (அறுபது) சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த தோழமை உடன்பாட்டை அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள்.

இதன்படி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 60 தொகுதிகளை பகிர்ந்து கொள்கிறது. இதன்படி, கும்மிடிப்பூண்டி(1), திருத்தணி(3), ஆவடி(6), வில்லிவாக்கம்(14), திரு.வி.க.நகர் (தனி)(15), எழும்பூர் (தனி)(16), விருகம்பாக்கம்(22), சோழிங்கநல்லூர்(27), பல்லாவரம்(30), செய்யூர் (தனி)(34), மதுராந்தகம் (தனி)(35), கே.வி. குப்பம் (தனி)(45), ஊத்தங்கரை (தனி)(51), வேப்பனஹள்ளி(54), பாலக்கோடு(57), பென்னாகரம்(58), செங்கம் (தனி)(62), கலசப்பாக்கம்(65), ஆரணி(67), மயிலம்(71), திண்டிவனம் (தனி)(72), வானூர் (தனி)(73), திருக்கோவிலூர்(76), கள்ளக்குறிச்சி (தனி)(80), ஏற்காடு ST(83), மேட்டூர்(85), சேலம் மேற்கு(88), நாமக்கல்(94), குமாரபாளையம்(97), பெருந்துறை(103), பவானிசாகர் (தனி)(107), கூடலூர் (தனி)(109), அவிநாசி (தனி)(112), திருப்பூர் வடக்கு(113), வால்பாறை (தனி)(124), ஒட்டன்சத்திரம்(128), நிலக்கோட்டை (தனி)(130), கரூர்(135), கிருஷ்ணராயபுரம் (தனி)(136), மணப்பாறை(138), திருவெறும்பூர்(142), முசிறி(145), பெரம்பலூர் (தனி)(147), திட்டக்குடி (தனி)(151), விருத்தாச்சலம்(152), பண்ருட்டி(154), கடலூர்(155), கீழ்வேளூர் (தனி)(164), பேராவூரணி(177), புதுக்கோட்டை(180), சோழவந்தான் (தனி)(190), மதுரை மேற்கு(194), அருப்புக்கோட்டை(207), பரமக்குடி (தனி)(209), தூத்துக்குடி(214), ஒட்டபிடாரம் (தனி)(217), ஆலங்குளம்(223), இராதாபுரம்(228), குளச்சல்(231), விளவன்கோடு(233) ஆகிய தொகுதிகளில் தேமுதிக களம்காண்கிறது. 

மேலும், அமமுக சார்பில் " தோழமை உடன்பாட்டை அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள் " என்று அக்கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK DMDK Alliance Confirm DMDK Allocate 60 Constituency TN Election 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->