#Breaking: மோடி அரசியலுக்கு வந்ததும் இதைத்தான் செய்தார்.. ஊழல் திமுகவை வறுத்தெடுத்து அமித் ஷா பேச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்திற்கு வந்த அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர்.  இதனைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " நீண்ட காலத்திற்கு பின்னர் சென்னை வந்துள்ளதால், அரசியல் குறித்தும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

மோடி அரசியலுக்கு வந்ததும் குடும்ப அரசியல், பரம்பரை அரசியல், ஜாதிய அரசியல் போன்றவற்றை ஒழிக்க விரும்பினார். குடும்ப அரசியலுக்கு பல மாநில மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பு தேர்தலில் பாஜகவிற்கு செலுத்தப்படும் வாக்குகளால் உறுதியாகியுள்ளது. இதனை தமிழக மக்களும் செய்வார்கள். 

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார்கள். ஊழலுக்கு எதிராக பேச இவர்களுக்கு அருகதை இல்லை. 2 ஜி விவகாரத்தில் பல கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள், இன்று ஊழலை ஒழிப்பதாக குரல் கொடுக்கிறார்கள். ஊழல் குற்றசாட்டை வைப்பதற்கு முன்னதாக குடும்பத்தை திரும்பி பார்த்தால், ஊழல் எது? ஊழல் இன்மை எது? என்று புரியும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amith Shah Speech about Modi Politics and Corruption DMK & Congress


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->