வணக்கத்தில் ஆரம்பித்து, ஊழல் காங்கிரஸ் - திமுகவை கழுவி ஊற்றி, மக்களுக்கு நன்றி வரை.. அமித்ஷா பேச்சு முழு விபரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்த அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன் மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர். 

இதன்பின்னர், தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், மாலை தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், 380 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார். 67 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்திய ஆயில் நிறுவன திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " அதிமுக - பாஜக தேர்தல் கூட்டணி தொடரும். தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. தமிழ் மொழியில் பேச முடியாததற்கு எனது வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மிகவும் தொன்மையானது. 

வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில், இந்தியா கொரோனாவுடன் போராடி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், தன்னார்வலர்கள், முதல்வர், துணை முதல்வர், அரசு அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். 

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மீட்சி விகிதம் அதிகளவு உள்ளது. தமிழகத்தில் வேலூர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்திய விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பல தடைகளை அகற்றவே, மோடியின் தலைமையிலான அரசு சீர்திருத்த நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசு இதற்கு அமோக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் வருடத்திற்குள் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். அனைத்து திட்டத்திலும் தமிழகம் முன்னணி வகிக்கிறது. 13 கோடி மக்களுக்கு மானிய விலையிலான எரிவாயு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. நீர்ப்பாதுகாப்பு, நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

விவசாயிகளுக்காக வருடத்திற்கு ரூ.6000 செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.95 ஆயிரம் கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இறுதி 10 வருடங்களில் என்னதான் செய்தார்கள்?. தமிழகத்தில் 45 இலட்சம் விவசாயிகளுக்கு நாங்கள் பணம் செலுத்தியுள்ளோம்.

தமிழக அரசின் நல்லாட்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் உள்ள மக்களின் இல்லங்களில் நல்ல குடிநீர் சென்று சேர்க்கும் திட்டத்தை 2024 ஆம் வருடத்திற்குள் வெற்றிகரமாக நிறைவேற்றுவோம். சாகர்மாலா திட்டத்தின் கீழ் 2.25 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சாலைகளுக்காக ரூ.57 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1.25 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உத்திரப்பிரதேசத்திற்கு அடுத்த படியாக, தமிழகத்தில் தான் இராணுவ பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டியுள்ளோம். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மத்திய அரசு அநீதி இழைப்பதாக தெரிவித்தார்கள்.. கடந்த 10 வருடங்களாக மத்திய அரசுடன் திமுக ஆட்சியின் போது இணைந்து பணியாற்றியுள்ளது. அவர்கள் செய்ததை பட்டியல் போட முடியுமா?.. நான் பட்டியல் போட்டு காட்டுகிறேன். 

எடுத்துக்காட்டுக்காக மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் 13 மற்றும் 14 ஆம் நிதியாண்டு திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.11,520 ஆயிரம் கோடி வரைவு திட்டத்தை மட்டுமே ஒதுக்கீடு செய்தது. நாங்கள் ரூ.32 ஆயிரம் கோடிக்கணக்கான திட்டத்தை அறிவித்துள்ளோம். இதனைப்போன்று பல திட்டங்களுக்கு தமிழகத்திற்கு பெரும் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், ஏழை மக்களின் வளர்ச்சிக்காகவும் இந்திய அரசு, தமிழக அரசு தோளோடு தோல் நின்று பணியாற்றுவோம். நீண்ட காலத்திற்கு பின்னர் சென்னை வந்துள்ளதால், அரசியல் குறித்தும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

மோடி அரசியலுக்கு வந்ததும் குடும்ப அரசியல், பரம்பரை அரசியல், ஜாதிய அரசியல் போன்றவற்றை ஒழிக்க விரும்பினார். குடும்ப அரசியலுக்கு பல மாநில மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தமிழக மக்களும் செய்வார்கள். 

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார்கள். ஊழலுக்கு எதிராக பேச இவர்களுக்கு அருகதை இல்லை. 2 ஜி விவகாரத்தில் பல கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள், இன்று ஊழலை ஒழிப்பதாக குரல் கொடுக்கிறார்கள். ஊழல் குற்றசாட்டை வைப்பதற்கு முன்னதாக குடும்பத்தை திரும்பி பார்த்தால், ஊழல் எது? ஊழல் இன்மை எது? என்று புரியும். 

ஏழைகளின் நலனில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் கண்ணோட்டத்தை மோடி மாற்றி அமைத்துள்ளார். யாழ்ப்பாணம் சென்ற மோடி, வீடுகளை இழந்த 50 இலட்சம் தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். 

நமது பாதுகாப்பு படையினர் 4 தீவிரவாதிகளை சுட்டு கொன்றனர். பெரும் சதி இதனால் தவிர்க்கப்பட்டது. மோடி அரசு பாதுகாப்பு படையினரின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அவர்களின் பணியை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் முன்னணி நாடாக இந்தியா இருக்கும். தமிழக மக்களுக்கும், தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஆட்சியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வணக்கங்கள் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amith Shah Chennai Kalaivanar Arangam Speech Full List 21 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->