துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு விமானப் படை வீரர் பலி.. ஆவடியில் அதிர்ச்சி சம்பவம்..!! - Seithipunal
Seithipunal



சென்னை அடுத்துள்ள ஆவடி விமானப் படை பயிற்சி மையத்தில் விமானப் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது வயது 55. இவர் சென்னையை அடுத்துள்ள ஆவடி விமானப் படை பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்துள்ளார். விமானப் படை பயிற்சி மையத்தின் 8 வது டவரில் தான் இவருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் எப்போதும் போல், இன்றும் பயிற்சி மையத்தின் 8 வது டவரில் காளிதாஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது தான் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இந்த துப்பாக்கி சத்தம் 8 வது டவரில் இருந்து வந்ததை அறிந்த சக வீரர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளனர். 

அப்போது பயிற்சி மையத்தின் 8 வது டவரில் காளிதால், தனது தொண்டையில் 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து சில நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தா புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காளிதாஸின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த காளிதாசுக்கு ஒரு மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AirMan Commits Suicide at Avadi Air Force Training Centre


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->