AINEPA-சங்கத்தின் அடையாள அட்டை மற்றும் பதவிஏற்பு விழா!  - Seithipunal
Seithipunal


அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் புதுவை மாநில நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பதவி ஏற்கும் விழா கௌர ஆலோசகர்  தண்டபாணி  தலைமையில் நடைபெற்றது.

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ராஜேந்திரன் அவர்களின் அங்கீகாரத்துடன் கூடிய  ஆலோசனை பெயரில், புதுவை மாநில நிர்வாகிகளுக்கு அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் சங்கத்தின் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்கும் விழா இ.சி.ஆர் ரோட்டில் அமைந்துள்ள பாண்டி சதர்ன் ரெசிடென்சி ஹாலில் நடைபெற்றது.

 அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் சங்கத்தின் புதுவை மாநில கௌரவ ஆலோசகராக தொழிலதிபரும் புதுவையின் உதயம் டிரஸ்ட் நிறுவனருமான  தண்டபாணி நியமிக்கப்பட்டார்.கௌரவ ஆலோசகர் தண்டபாணி அவர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்பித்தார்.

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் புதுவை மாநில தலைவராக ராஜசேகர், துணைத்தலைவராக தங்கப்பிரகாசம் மற்றும் அசோக்குமார் செயலாளராக சிவகுமார், இணைச் செயலாளராக முனியன், பொருளாளராக செந்தில்ராஜ், ஒருங்கிணைப்பாளராக முரளி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.. 

விழாவில் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பத்திரிகையாளர்களின் தேவையறிந்து பல உதவிகளை செய்து வரும் தேசியத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழாவிற்க்கான ஏற்பாடுகளை அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AINEPA Associations identity card and position acceptance ceremony


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->