மாப்பிள்ளை பொடி இட்லி... கேக்கவே different ஆ இருக்கு இல்லா...!
Groom powder idli
மாப்பிள்ளை பொடி இட்லி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
இட்லி 2
தேங்காய்
எண்ணெய் சிறிது
கடுகு தேவையான அளவு
உளுத்தம்
பருப்பு தேவையான அளவு
மாப்பிள்ளை
பொடி 2 டீஸ்பூன்

செய்முறை :
மாப்பிள்ளை பொடி இட்லி செய்வதற்கு முதலில் கொப்பரைத் தேங்காயுடன், சிறிது தனியா, உப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெறும் கடாயில் நன்கு வறுத்து அரைத்து மாப்பிள்ளை பொடியினை ரெடி செய்து வைத்துக் கொள்ளவும். அடுத்து இட்லியை எடுத்து 8 துண்டுகளாக வெட்டவும். பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, இட்லித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.பிறகு கடைசியாக அதில் மாப்பிள்ளை பொடியைத் தூவி கிளறவும். இப்போது சுவையான மாப்பிள்ளை பொடி இட்லி ரெடி.