அதிமுக-தவெக கூட்டணி? 100 எல்லாம் கிடையாது..40 இடங்கள்தான்.. துணை முதல்வர் கன்பார்ம்.. விஜயுடன் எடப்பாடி போட்ட டீல்? - Seithipunal
Seithipunal


அதிமுக, பாஜக, மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் — இந்த மூவருக்கிடையில் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த சில நாட்களாக, டெல்லி பாஜக தலைவர்கள் விஜயுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருகிறார்கள் என்றும், கூட்டணியில் நடிகர் ஒருவரும் முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவின் தலைமைப் பக்கம் பார்த்தால் —எடப்பாடி பழனிசாமி, விஜயிடம் நேரடியாக தொலைபேசி மூலம் உரையாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடலில் 2026 சட்டமன்றத் தேர்தல், கூட்டணி வாய்ப்பு, திமுக ஆட்சியை எதிர்கொள்வது போன்ற பல அரசியல் விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

அதிமுக வட்டாரத்திலிருந்து வரும் தகவல்களின் படி, எடப்பாடி பழனிசாமி விஜயிடம் “திமுக ஆட்சியை அகற்ற ஒன்றாக வருவோம்” என்று கேட்டுள்ளார். இதற்கு விஜய் ‘இல்லை’ என்று கூறவில்லை. மாறாக, “மக்களை சந்திக்கப் போகிறேன், பிரச்சாரத்தை தொடங்கப் போகிறேன். ஜனவரி மாதத்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுப்பேன்” என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தொலைபேசி உரையாடல் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும், கரூர் சம்பவம் குறித்து எடப்பாடி, விஜயிடம் தனிப்பட்ட முறையில் இரங்கல் தெரிவித்துள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், பாஜக தரப்பிலிருந்து விஜய்க்கு 40க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. “நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள், வழக்குகளை நாங்கள் கவனிக்கிறோம்” என டெல்லி பாஜக தலைவர்கள் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தானும் ரகசியமாக விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூறுவதாவது —“எடப்பாடி விஜயிடம் கூட்டணிக்கு வாருங்கள் என்று கேட்டார். விஜய் அதற்கு நேர்மறையான பதில் அளித்துள்ளார். 2026 பொங்கலுக்குப் பிறகு கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

அதிமுக – பாஜக கூட்டணியில் தற்போது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் இல்லாததால் கூட்டணி பலவீனமடைந்துள்ளது. இதனை வலுப்படுத்தும் வகையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால் மட்டுமே நிலைமை வலுவாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்போது கேள்வி —2026 தேர்தலுக்கு முன் அதிமுக – பாஜக – விஜய் கூட்டணி உருவாகுமா?
அல்லது விஜய் தனியாக தனது அரசியல் பாதையில் செல்லப்போகிறாரா?

அதிமுகவும் பாஜகவும் விஜயை நோக்கி விரித்துள்ள அரசியல் கயிற்றில், அடுத்த சில மாதங்களில் எந்த திசையில் முடிவு எடுக்கப்படும் என்பது தற்போது தமிழக அரசியலில் மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Tavega alliance Not all 100 only 40 seats Deputy Chief Minister confirmed A deal made with Vijay


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->