அதிமுக, திமுக எதிரி! தவெக வொர்ஸ்ட்! பாஜகதான் பெஸ்ட்! பாஜகவில் இணைகிறாரா காளியம்மாள்? - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் இன்று பெரும் பேசுபொருளாகி இருப்பது — நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தது தான்.

இந்தச் சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டாலும், அரசியல் வட்டாரங்கள் இதை சாதாரண நிகழ்வாகவே பார்க்க மறுக்கின்றன.

நயினார் நாகேந்திரனைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த காளியம்மாள், செய்தியாளர்களிடம் பேசும்போது —“இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். ஆனால் தமிழக மீனவர்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் நான் ஒரு புதிய அரசியல் கட்சியில் சேரப்போகிறேன். 2026 சட்டசபைத் தேர்தல் வித்தியாசமான களமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.இந்த ஒரு வாக்கியம் தான், தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

காளியம்மாள் — நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,மேலும் மயிலாடுதுறை தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்.அந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதிக வாக்குகள் பெற்றவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.

சிறந்த பேச்சாளரான காளியம்மாள், ஒரு கட்டத்தில் சீமானின் வலது கை எனக் கருதப்பட்டவர்.ஆனால், கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பனிபோர் காரணமாக, 2024 பிப்ரவரியில் காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதிலிருந்து இன்று வரை அவர் எந்தக் கட்சியிலும் இணையவில்லை. ஆனால், பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்பது அரசியல் வட்டார தகவல்.

முன்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் இணைந்தபோது,காளியம்மாளும் அந்தக் கட்சியில் சேரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.அவரும் விஜய்யின் பனையூர் இல்லத்திற்கு செல்லப் போகிறார் என்ற தகவலும் வந்தது.
ஆனால், காளியம்மாள் அதை உடனடியாக மறுத்து —“விஜய் அழைப்பு விடுத்தால், அவரின் நோக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் நான் யோசிப்பேன்” என கூறியிருந்தார்.

இதையடுத்து திமுக மற்றும் அதிமுக தரப்பும் காளியம்மாளை அணுகியதாக செய்திகள் வெளியானது.ஆனால், நாதகவில் இருந்தபோது அந்த இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்திருந்த காளியம்மாள்,அவர்களின் அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நயினார் நாகேந்திரனுடன் நடந்த சந்திப்பு,அவர் பாஜகவில் இணைவதற்கான தொடக்கமாக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், தவெகவில் தற்போது நிலைமை பாதகமாக இருப்பதும்,இரண்டாம் நிலை தலைவர்கள் பலர் சர்ச்சைகளில் சிக்கி மௌனமாகிவிட்டதும் காளியம்மாளின் கவனத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் அவர் விஜயின் கட்சியில் சேர்வது சந்தேகம்தான்,ஆனால் பாஜகவில் இணைவது சாத்தியமே என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

அவர் பாஜகவில் இணைந்தால் — மீனவர் சமூகத்தை தன்னுடன் சேர்த்து கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையிலும் பாஜக இருக்கிறது.
இது நயினார் நாகேந்திரனின் அரசியல் வலிமையையும் கூட்டும் என கூறப்படுகிறது.

ஒரு மரியாதை சந்திப்பாக தொடங்கிய நிகழ்வு,இப்போது தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்கை கிளப்பி விட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK DMK enemies Thaveka is the worst BJP is the best Is Kaliammal joining BJP


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->