வேளாண் பட்ஜெட்: 7 மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டுக்காக ரூ. 43 கோடி ஒதுக்கீடு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் வேளாண் சட்டத்தை வேளாண் மற்றும் உழவர் நல பாதுகாப்பு துறை அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார் .

அதில், சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐய்யம்பாளையம் நெட்டை தென்னை, செஞ்சோணம் செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவரி உள்ளிட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு ரூ.  30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

விவசாயிகளின் சிறந்த விலை கிடைக்க ரூ. 60 கோடி மதிப்பிலான விளைப்பொருட்களை பண்ணை வழி வர்த்தகம் செய்ய வழி செய்யப்படும். 

பொருளீட்டுக் கடன் வரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும். 2.22 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணுயிர் பாசனம் அமைக்க ரூ. 773.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

செங்கல் ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரைவை நிறுத்தம் ஏற்படுவதை தவிர்க்க ரூ. 6.31 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ 9 கோடி செலவில் மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும் . 

பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தர்மபுரி, திண்டுக்கல், விருதுநகரில் இயற்கை வளம் மேம்படுத்த ரூ. 43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ. 10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agriculture Budget natural resource development 7 districts


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->