மீண்டும் உயர்ந்த தக்காளியின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி மார்கெட்டாக கருதப்படும் கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் தமிழ்நாடு முழுவது உள்ள காய்கறி சந்தைகளில்  அவ்வப்போது மக்கள் பிரதானமாக உபயோகம் செய்யும் பொருட்களின் விலை திடீர் உச்சத்தை காணுவது வாடிக்கையாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெங்காயத்தின் விலை அதிர்ச்சியுறும் வகையில் உயர்ந்த நிலையில், பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட வெங்காயங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் விற்பனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இந்த மாதம் தொடக்கத்தில் நாட்டு தக்காளி கிலோ ரூ.25 மற்றும் ரூ.30 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரங்களில் விலை உச்சமடைந்து கிலோ தக்காளி ரூ.150 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெய்த மழை காரணமாக தக்காளி செடிகள் சேதமாகி உற்பத்தி குறைந்ததால் விளைவாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை குறைந்து ரூ. 40-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் தங்களின் விலை அதிகரித்தது.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை இன்று ரூ. 70 முதல் 75 வரை உயர்ந்துள்ளது. போக்குவரத்துப் பிரச்சினை, மழை உள்ளிட்ட பல காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Again tomato price increase in Tamilnadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->