இறுதி கட்டப் பணிகளில் அடையாறு தொல்காப்பிய பூங்கா: 160 மீட்டர் நீளத்தில் தொங்கு பாலம்: 600 பேர் ஒன்றாக நிற்க முடியும் என அறிவிப்பு..!
Adyar Tholkappiyar Park in final stages of construction
சென்னை தொல்காப்பியர் பூங்காவின் இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கடந்த 2007-ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அடையாறு பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ‘தொல்காப்பியர் பூங்கா’ அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
பின்னர் 2011-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, அப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என பெயர் மாற்றம் செய்தது. அங்கிருந்த தொல்காப்பியர் பூங்கா பெயர் பலகையும் அகற்றப்பட்டது.
-3cj2r.png)
இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு குறித்த பூங்காவை பார்வையிட்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
மீண்டும் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பூங்காவுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மீண்டும் அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தொல்காப்பியர் பூங்கா என பெயரிடப்பட்டது. அத்துடன், அந்தப் பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
-69yes.png)
58 ஏக்கர் பரப்பளவில் விரிவுப்படுத்தி பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வரும் வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது.
இந்த பூங்காவின் சிறப்பம்சமாக ரூ.9 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் தொங்கு பாலம் கட்டி முடக்கப்பட்டு இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பசுமைவழிச் சாலையின் குறுக்கே தொங்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பாலம் 160 மீட்டர் நீளம் கொண்டுள்ளது. குறித்த பாலம் 600 பேர் நின்றாலும் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆய்விற்கு பிறகு விரைவில் தொங்கு பாலம் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Adyar Tholkappiyar Park in final stages of construction