அடையாறு இரவு ரெய்டு பரபரப்பு! ரூ.245 கோடி தங்க-வைர நகைகள் பறிமுதல்...! - தேர்தல் விதிமுறை மீறல் வெளிச்சம் - Seithipunal
Seithipunal


சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம், தங்கம், வைர நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காவலர்கள் இணைந்து தீவிர சோதனைகள் மூலம் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை அடையாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தபோது, அதில் பெட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய அளவிலான தங்க மற்றும் வைர நகைகள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.

அவற்றை விரிவாக பரிசோதித்ததில், அந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.245 கோடி என தெரியவந்தது.மேலும் விசாரணையில், இந்த நகைகள் சென்னை சவுகார்பேட்டையில் இருந்து பல்லாவரம் பகுதியில் செயல்படும் ஒரு நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக கண்டறியப்பட்டது.

அவற்றுக்கு தொடர்புடைய ஆவணங்கள் இருந்தபோதிலும், இத்தகைய உயர்மதிப்புள்ள பொருட்களை தேர்தல் காலத்தில் எடுத்துச் செல்ல, தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெறுவது கட்டாயமானதாகும். ஆனால் அந்த அனுமதி பெறப்படாமல் நகைகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, விதிமுறைகள் மீறப்பட்டதாக கருதி ரூ.245 கோடி மதிப்புள்ள தங்க-வைர நகைகள் அனைத்தும் தேர்தல் பறக்கும் படையினரால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adyar night raid stirs up excitement 245 crore gold and diamond jewellery seized Election code violation exposed


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->