உயர்நீதிமன்ற வாசலிலேயே இப்படி ஒரு ரவுடியிஸம்.. இந்த அதிகாரத் திமிர் வீழ்த்தப்படும் - திருமாவளவனுக்கு அதிமுக கண்டனம்!
ADMK IT Wing condemn to VCK Thirumavalavan
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "வணக்கம் திருமாவளவன் சார்....
உங்க கார், ஒரு ஸ்கூட்டர் ல இடிச்சதுக்கு நியாயமா நீங்க என்ன பண்ணிருக்கணும்?
உங்க ஓட்டுநரை அனுப்பி, அந்த ஸ்கூட்டர் ஓட்டுநரின் நலத்தை உறுதிசெய்திருக்க வேண்டும்.
எங்களோடு ஒரு காலத்தில் கூட்டணியில் இருந்த தன்மையான குணம் படைத்த தோழர் திருமா அதை செய்திருப்பார்.
ஆனா, திமுக கூட்டணியில் இருக்கும் நீங்க என்ன பண்ணிருக்கீங்க?
உங்க கட்சி தொண்டர்களை... இல்ல இல்ல.. குண்டர்களை ஏவி விட்டு, அவர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருக்காங்க...
உயர்நீதிமன்ற வளாக வாசலிலேயே இப்படி ஒரு ரவுடியிஸம் நடத்துற தைரியம் உங்கள் கட்சியினருக்கு எங்கிருந்து வந்தது? திமுக கூட்டணியில் இருப்பதால் அவர்கள் DNA ஒட்டிக்கொண்டதா?
உங்கள் கட்சிக்காரர்களின் வன்முறையை கொஞ்சம் கூட நீங்கள் தடுக்கவில்லை என்பதை தாண்டி, நீங்கள் உங்கள் காரை விட்டே வெளியே வரவில்லையே? காரில் அமர்ந்து ரசித்துக் கொண்டு இருந்தீர்களோ?
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க வேண்டிய நீங்கள் கூட, ஆதிக்க மனப்பான்மையோடு தான் செயல்படுகிறீர்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்களுக்காக மேடை அமைத்து பேசினீர்களே... உங்கள் கட்சியினர் நடத்திய வன்முறையை தலைமை நீதிபதி துளியாவது ஏற்பாரா?
அப்புறம், திமுக ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு லட்சணத்திற்கு நீங்களும் விசிக தொண்டர்களுமே இப்போது சாட்சி ஆகிவிட்டீர்கள்.
இந்த அதிகார மமதையெல்லாம் இன்னும் 7 மாதங்கள் தான். மக்கள் துணையோடு இந்த அதிகாரத் திமிர் வீழ்த்தப்படும்!
English Summary
ADMK IT Wing condemn to VCK Thirumavalavan