அந்த மருந்து இதுதான்.. மாற்றி சொன்ன அமைச்சர்.. சிபிஐ விசாரணை - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.

இன்று சட்டமன்றம் கூடியதும் கேள்வி நேரத்திற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து உடனடி விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர். 

பின்னர், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என தொடர் முழக்கமிட்டு அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தினந்தோறும் மக்களின் உயிர் பறிபோகிறது, இதில் அரசின் செயல்பாடு என்ன? கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

விஷசாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தவறான தகவல் தருவதால் ஆணைய விசாரணை சரியாக இருக்காது. மாநில அரசு விசாரணை செய்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரிக்கை விடுக்கிறோம்.  

நீதியை நிலைநாட்ட உண்மை குற்றவாளிகை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது. விஷச்சாராயம் முறிவுக்கான மருந்தை நான் சொன்னேன். மருத்துவத்துறை அமைச்சர் அல்சர் மருந்தை சொல்கிறார்.

விஷச்சாராயம் முறிவுக்கான ஹோமிபிசோல் மருந்தை தான் நான் குறிப்பிட்டேன், அமைச்சர் Omeprazole மருந்து குறித்து தெரிவித்துள்ளார். அமைச்சரே மருந்தின் பெயரை மாற்றி கூறிவிட்டு இருப்பு இருப்பதாக தவறாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy TN Assembly Kallasarayam Kallakurichi issue


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->