கூடுதல் மின்சாரம் வழங்கவேண்டும்..மத்திய அமைச்சரிடம் நமச்சிவாயம் கோரிக்கை!
Additional electricity should be provided Request to the central minister,Namachivayam
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேலும் புதுச்சேரிக்கு மின்சாரம் 105 மெகாவாட்ஸ் கூடுதலாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம், அமைச்சர் நமச்சிவாயம்கோரிக்கை மனு அளித்தார்.
புதுச்சேரிக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மத்திய அமைச்சரிடம், அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை.பெங்களூரில் நடைபெற்ற மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் புதுச்சேரி சார்பில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு மத்திய அரசின் உதவியோடு புதுச்சேரியில் மின் துறையில் பல்வேறு வளர்ச்சிகள் அடைந்துள்ள நிலையில் மேலும் புதுச்சேரி மின் துறையை மேம்படுத்துவது சம்பந்தமாக கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாட்டில் புதுச்சேரியில் இருந்து கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய மின்துறை அமைச்சர் ஸ்ரீ மனோகர் லாலை சந்தித்து புதுச்சேரியில் தற்போது மின்கட்டமைப்பில் இருந்து மொத்த பரிமாற்ற திறன் 540 மெகாவாட் ஆகும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேலும் புதுச்சேரிக்கு 105 மெகாவாட்ஸ் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் விரைந்து புதுச்சேரிக்கு கூடுதலாக மின் மெகாவாட்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
English Summary
Additional electricity should be provided Request to the central minister,Namachivayam