'தமிழர்கள் இந்துக்களே இல்லை' என்று பிரிக்க துடிக்கும் சிறுபான்மை வியாபாரிகள் கனவு பலிக்காது - நடிகை கஸ்தூரி.! - Seithipunal
Seithipunal


'தமிழர்கள் இந்துக்களே இல்லை' என்று பிரிக்க துடிக்கும் சிறுபான்மை வியாபாரிகள் கனவு பலிக்காது என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் வெளியானதிலிருந்து அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

இது குறித்து சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசிய கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.

அதில் அவர், "ராஜராஜ சோழனை இந்து என்று கூறுவது தவறானது. ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றும் வரலாறு மாற்றி திணிக்கப்படுகிறது" என்று பேசி இருந்தார். இதை கேட்ட பலரும் அவர் இந்து தான். அதனால் தான் அவர் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கட்டி இருக்கிறார். எப்படி அவரை இன்று இல்லை என்று கூற முடியும் என்று பேசி வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது இவருடைய கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காமெடி நடிகர் கருணாஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், இவருடைய கருத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து ராஜராஜசோழன் இந்து அரசர் தான் என கூறி வருகின்றனர்.

இதனையடுத்து ட்விட்டரில் தமிழர்கள் இந்துக்கள் இல்லை #TamilsAreNotHindus என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் ட்ரண்டாகி வந்தது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 'எவ்வளவு கேவலமான அரசியல். தமிழர்கள் இந்துக்கள் இல்லை. அப்போ தமிழன் யார் என்ற கேள்வி வருதில்லயா.?  ராஜராஜன் சைவன் என்று கூப்பாடு போடுபவர்கள் கூட  தமிழர்கள் சைவர்கள் என்று பதிவிடாமல், தமிழர் இந்து அல்ல என்று சொல்வதின் உள்நோக்கம் புரிகிறதா.?  

மாற்று மதத்தினரின் தமிழ்த்தனத்தை தூக்கி பிடித்து இந்து நம்பிக்கைகளை மட்டும் மட்டம் தட்டி இந்துவாக தொடர்ந்தால் தமிழரே இல்லை, வேசி மகன் என்றெல்லாம் சொல்லி எப்படியாவது மக்களை பிரித்து ஆள துடிக்கும் சிறுபான்மை வியாபாரிகள் கனவு பலிக்காது. தமிழர் வரலாறு என்பது இந்து மதத்தின் வரலாறு.' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Kasthuri speech about rajarajachozhan hindhu issue


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->