ஒன்றிய அரசு, நீட் தேர்வு ரத்து - அதிரவைத்த நடிகர் விஜய்! - Seithipunal
Seithipunal


இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கி வருகிறார். இதற்கான் நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் 19 மாவட்ட மாணவர்களுக்கு இன்று நடிகர் விஜய் விருது வழங்குகிறார்.  மொத்தம் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கூடிய சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் இருந்துஅனுப்பிய நீட் விலக்கு மசோதாவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழக மாநில கல்வியில் பயின்றுவிட்டு தேசியக் கல்வியில் தேர்வு எழுத சொல்வது அநீதி. 

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. பன்முகத்தன்மை என்பது பலம் தான், பலவீனம் அல்ல. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எனது பரிந்துரை. மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நீட் விலக்கு ஒன்றே தீர்வு. மேலும் நிரந்தர தேர்வுக்கு கல்வி பட்டியலை மாநில பட்டியலுக்கு மற்ற வேண்டும்" என்றும் நடிகர் விஜய் வலியுறுத்தினார்.

மேலும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் நடிகர் விஜய் தனது கருத்தினை பதிவு செய்தார். இது மட்டும் அல்லாமல் மத்திய அரசு, நடுவண் அரசு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, திமுகவின் அஜெண்டாவான "ஒன்றிய அரசு" என்று பயன்படுத்தி நடிகர் விஜய் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay Say about NEET Ban And New Education Policy


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->