விஜய் பிறந்தநாளில் கொடூரம்! கைது செய்யுங்கள் - பாஜக தரப்பில் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயின் பிறந்தநாள் இன்று. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் பிறந்தநாளைக்கு முன்னிட்டு நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சி ஒன்றில், சிறுவன் ஒருவன் ஓடுகளை உடைக்கும்  போது, கையில் தீ பற்றி, அதனை அணைக்க முற்பட்டவர் மீது பெட்ரோல் சிந்தி தீப்பறவிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தங்கி உள்ள சென்னை நீலாங்கரை பகுதியில், நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு சாகச நிகழ்ச்சி ஒன்றுக்கு, சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் இ சி ஆர் சரவணன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சிகள் சிறுவன் ஒருவனை அழைத்து வந்து, ஓடுகளை பற்றி எரியும் கைகளால் உடைக்க வைக்கும்  சாகசத்தை நிகழ்த்த திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி சிறுவன் கையில் பெட்ரோலை ஊற்றி சிறுவன் ஓடுகளை உடைக்க, சிறுவன் கை சூடு தாங்க முடியாமல் நெருப்பை அணைக்க முயல்கிறார்.

அப்போது அவர் அருகில் இருந்த நபர் பெட்ரோல் கேனுடன் தீயை அணைக்க முற்பட்டதால், தீ மேலும் பரவியது.

அணைக்க முற்பட்டவரின் உடலிலும் தீ பற்றியது. இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும்  கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

மேலும் விஜய் தனது பிறந்தநாளுக்கு எந்த கொண்டாட்டத்தையும் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தியும், அதனை மீறியும் இப்படியான ஒரு கொடூர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர் சரவணனை கைது செய்ய வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியில் பெட்ரோல் கேனையை கையில் வைத்திருந்த அந்த நபரையும் கைது செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, மிக ஆபத்தான சம்பவம். பயிற்சியாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay Birthday celebration in chennai BJP condemn


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->