"நானே குடிப்பேன்".. பொதுவெளியில் போட்டுடைத்த விஜய் ஆண்டனி - நடந்து என்ன? - Seithipunal
Seithipunal


"நானே குடிப்பேன்".. பொதுவெளியில் போட்டுடைத்த விஜய் ஆண்டனி - நடந்து என்ன?

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி உலக போதை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நாளை போதை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை பெருநகர காவல் மற்றும் அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பில் ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதையல் வேட்டை மாரத்தான் போட்டிகள், சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், திரைப்பிரபலங்கள் ரம்யா பாண்டியன், இந்துஜா ரவிச்சந்திரன், ஷாக்சி அகர்வால், பிரியா பவானி சங்கர், விஜய் ஆண்டனி, பிரபல யூடியூபர்கள் கோபி - சுதாகர், இர்ஃபான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

இந்த பரிசளிப்பு விழவைத்து தொடர்ந்து விஜய் ஆண்டனி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ’’தற்போதைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் பல்வேறு வடிவங்களில் போதைப்பொருள் புழங்குவதாக செய்திகளில் வருகிறது.

விளையாட்டாக ஆரம்பிக்கும் இதுபோன்ற செயல்கள் ஒருகட்டத்தில் மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. ஆகவே, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து "Say no to drugs" என்பதற்கு ஆதரவு தர வேண்டும். சமூகத்தில் இதற்காக ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார்.

அப்போது, இந்த நிகழ்ச்சி ’போதை பொருள் தடுப்புக்கு எதிராக மட்டும் தானே? குடிப்பழக்கத்திற்கு எதிராக இல்லையே?’ பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதற்கு விஜய் ஆண்டனி, ‘’நான் குடிப்பேன். அதான் கேட்டு தெளிவு பெறுகிறேன்” என்று சிரித்த படித் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay antony press meet in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->