துணை முதல்வருடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து துணை-முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அதன் படி, நடிகர் சிவகார்த்திகேயன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக துணை முதல்-அமைச்சராக புதிய பொறுப்பை ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor sivakarthikeyan meet deputy chief minister udhayanithi stalin


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->