ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் தீடீர் சந்திப்பு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ள நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், பல வருடமாக அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். ரஜினிகாந்த் எப்படியும் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, கடந்த வருட சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் மன்றம் சார்பாக நாம் களமிறங்குகிறோம் என அறிவிப்பு வெளியிட்டு உற்சாகப்படுத்தினார். 

ஒருபுறம் கட்சிப்பணிகள் மற்றொருபுறம் சிவாவுடன் அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பு என ரஜினிகாந்த் பரபரப்பாக செயல்பட்டு வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ரஜினிகாந்த் அறிக்கை வாயிலாக தனது நிலையை தெரியப்படுத்தி, கொரோனா சூழலில் என்னுடன் வரும் ரசிகர்களை நான் இழக்க தயாராக இல்லை என்று கூறி அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். 

இதனால் ரஜினி மக்கள் மன்றத்தினர் பலரும் தங்களை மாற்றுக்கட்சியில் இணைத்துக்கொண்ட நிலையில், உண்மையான ரஜினி ரசிகர்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களின் முடிவு எதுவோ அதுவே எங்களின் முடிவு என்று தெரிவித்து இருந்தனர். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று சில வில்லங்க ரசிகர்கள் வேண்டும் என்ற அவரது வீட்டின் முன்பு சென்று போராட்டமும் நடத்தி வந்தனர். 

தற்போது, அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு சில ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடை அறிய மீண்டும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜூலை 12 ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில், மக்கள் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Rajinikanth Meets RMM Supporters 12 July 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->