ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகர் ரஜினிகாந்த்.!! 
                                    
                                    
                                   Actor Rajinikanth cast is vote in Chennai
 
                                 
                               
                                
                                      
                                            உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவாக 18 வது நாடாளுமன்ற பொது தேர்தல் கலைக்கட்டியுள்ளது. இன்று முதல் வரும் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
முதற்கட்டமாக இன்று 21 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிட பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் திரைத்துறையினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
அந்த வகையில் நடிகர் அஜித்குமார் தனது ஜனநாயக கடமையை முதல் ஆளாக ஆற்றினார். அதே போன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Actor Rajinikanth cast is vote in Chennai