#HBD கு.ஞானசம்பந்தம்.. தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகருக்கு இன்று பிறந்தநாள்.!
Actor and Tamil Professor Gnanasambandam Birthday Today 19 Oct 2021
தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் கு.ஞான சம்பந்தனுக்கு இன்று பிறந்தநாள்.
நடிகர் கு. ஞானசம்பந்தம் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் எனும் ஊரில் பிறந்த இவர், தற்போது மதுரை நகரில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி, தகைசால் பேராசிரியாகவும் இருக்கிறார்.

நகைச்சுவையில் ஈடுபாடு கொண்ட ஞானசம்பந்தன் கடந்த 25 ஆண்டுகாலமாக இயங்கிவரும் மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும், சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி, அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
1. வாங்க சிரிக்கலாம்,
2. பரபரப்பு - சிரிப்பு,
3. பேசும் கலை (பல்கலை., கல்லூரிகளிலும் இந்நூல் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது),
4. உலகம் உங்கள் கையில்,
5. இன்றைய சிந்தனை,
6. வாழ்வியல் நகைச்சுவை,
7. சினிமாவுக்குப் போகலாம் வாங்க! உட்பட 15 க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதி இருக்கிறார்.

விருமாண்டி, இதயத் திருடன், கைவந்த கலை, ஆயுதம் செய்வோம், சிவா மனசுல சக்தி, ரஜினி முருகன், பசங்க 2, உத்தம வில்லன், நிமிர்ந்து நில், கொம்பன், மருது போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1995 ஆம் வருடம் தமிழ் இயக்கத்தின் சிற்றரசு பட்டம், 2005 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, 2014 ஆம் வருடத்தில் மகாகவி பாரதியார் விருது, உவகைப்புலவர், தமிழறிஞர், நகைச்சுவை அரசர், நகைச்சுவைத்தென்றல், இளைய கலைவாணர், சித்த பத்மஸ்ரீ விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
பல புகழ் கொண்ட நகைச்சுவை மன்னனாக பட்டிமன்றத்திலும், திரையிலும் இருந்து வரும் நடிகர் கு. ஞானசம்பந்தன், கடந்த 19 அக்டோபர் 1956 இன்று பிறந்தார். இன்று அவரது பிறந்தநாள். அவருக்கு வயது 64 என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Actor and Tamil Professor Gnanasambandam Birthday Today 19 Oct 2021