மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்குமார்.! - Seithipunal
Seithipunal


சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார் தற்போது வீடு திரும்பினார்.

நடிகர் அஜித்குமார் கடந்த வியாழக்கிழமை வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார். 

அப்போது காதுக்கு கீழே உள்ள நரம்பு பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுரை தெரிவித்திருந்த நிலையில் அரை மணி நேரத்தில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. 

மேலும் இரண்டு நாட்கள் மருத்துவர் கண்காணிப்பில் நடிகர் அஜித் இருந்த நிலையில் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக அஜித்தின் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajith Kumar returned home 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->