விடுமுறை தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும் - தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் அரசியல் காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியதாவது:-

 "92.80 விழுக்காடு வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய் மாலையுடன் பூத் ஸ்லிப் வழங்கும் பணி நிறைவடைகிறது.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு 16.04.2024 கடைசி நாளாகும். 

வரும் 19ஆம் தேதி வாக்களிக்க வசதியாக தனியார் நிறுவனங்கள் விடுமுறை தரவில்லை எனில் ஊழியர்கள் 18 மற்றும் 19ஆம் தேதி 1950 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம். விடுமுறை தராத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும். 

18ஆம் தேதி மாலைக்குள் வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் பணி நிறைவடையும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக வரும் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை வேட்பாளர்கள் பரப்புரை செய்யலாம்” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

action against private company for no leave at coming 19th


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->