பெரும் பதற்றம்... நெல்லையில் போலீசாரால் சுடப்பட்ட நபர் உயிரிழப்பு.!!
Accused died in hospital police gun shoot in thirunelveli
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாங்குழி பகுதியில் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று அரசு பேருந்து ஓட்டுனர் நடத்தினரை விட்டுவிட்டு பேச்சு துரை என்பவர் தப்பி ஓடினார். அப்போது தடுக்க வந்த காவலரையும் தாக்கி விட்டு தப்பி ஓடிய பேச்சுதுரையை போலீசார் சுட்டு பிடித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த பேச்சு வரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் பேச்சி துரை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பேச்சி துரை உயிரிழந்துள்ளதால் நெல்லை, வீர நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றுமான சூழல் நிலவி வருகிறது.
English Summary
Accused died in hospital police gun shoot in thirunelveli