விசிக மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் ஆப்சென்ட்!திருமாவளவனுக்கு கட்சியினர் நெருக்கடி? நடவடிக்கை எடுக்க தயாராகும் திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்காதது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுவில் ஷாநவாஸின் பெயர் இடம்பெற்றிருந்தபோதும், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால், மாநாட்டில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என கட்சியின் ஒரு தரப்பினர் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் ஷாநவாஸ் அதிருப்தியில் இருந்ததாகவும், அவரை சமாதானப்படுத்தும் வகையில் முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் தவெக அரசை ஷாநவாஸ் விமர்சித்தது விசிகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியில் ஷாநவாஸ் பங்கேற்று உரையாற்றிய நிலையில், விசிகவின் முக்கிய மாநாட்டில் அவர் பங்கேற்காதது தற்போது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், ஆளூர் ஷாநவாஸிடம் திருமாவளவன் விளக்கம் கேட்பாரா? அவரது முதன்மைச் செயலாளர் பதவி பறிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு விசிக வட்டாரத்தில் எழுந்துள்ளது. அவரது பதவியை கைப்பற்ற கட்சிக்குள் சிலர் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aaloor Shahnawaz absent from the VCK conference Are party members pressuring Thirumavalavan Thirumavalavan prepares to take action


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->