ஆடி கிருத்திகை: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்!
Aadi Krithikai Devotees gathered in Murugan temples
ஆடி கிருத்திகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது.உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளை ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால் முடிப்பர் ,
அதன்படி, ஆடி கிருத்திகை இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. விரதம் இருக்கும் பக்தர்கள் காலையிலே வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களுக்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பல கோவில்களில் அன்னதானங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆடி கிருத்திகையையொட்டி அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதைபோல சென்னை, வடபழநி முருகன் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Aadi Krithikai Devotees gathered in Murugan temples