ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறித்த வாலிபர்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
A young man who stole jewelry and money from a woman on a moving train do you know what happened in the end?
ஓடும் ரெயிலில் பயணித்த பெண்ணிடம் இருந்து நகை மற்றும் பணம் பறித்து தப்ப முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ரெயிலில் இருந்து குதிக்கும்போது எலும்பு முறிவு ஏற்பட்டு தப்ப முடியாமல் இருந்த இடத்தில் பிடிபட்டார்.
தமிழகத்தில் வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீப காலமாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலி அறுத்துக் கொண்டு ஓடுவது, ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் இடமிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து தப்பி விடுகின்றனர். சிலர் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறித்து ஓடிய வாலிபர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து செமையாக வாங்கிக் கொண்டார் .அவரை போலீசார் பதமாக தூக்கிக்கொண்டு சிறையில் அடைத்துள்ளார். இந்த சம்பவம் விழுப்புரம் அருகே நடைபெற்று உள்ளது .அதனை தற்போது விரிவாக பார்க்கலாம்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சீதை (60) மற்றும் லட்சுமி (63) ஆகிய இருவரும், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தாம்பரத்திற்கு பயணம் செய்துகொண்டிருந்தனர். சீதை தனது பர்சில் 5 பவுன் நகை மற்றும் ₹13,000 ரொக்கம் வைத்திருந்தார்.
அதே ரெயிலில் ராணிப்பேட்டை – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த மோகித் (20) என்பவரும் பயணித்தார். பர்சில் இருந்த பொருட்களை கவனித்த மோகித், திருட திட்டமிட்டு, விக்கிரவாண்டி அருகே ரெயில் மெதுவாகச் சென்ற வேளை பர்சை பறித்து ஓடும் ரெயிலில் இருந்து குதித்தார்.
சீதை கூச்சலிட, அவர் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். சக பயணிகளுடன் கீழே இறங்கி தேடியபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஓட முடியாமல் இருந்த மோகித் பிடிபட்டார். பர்சும் மீட்கப்பட்டது.
இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் மற்றும் திண்டிவனம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகித்தை கைது செய்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சேர்த்தனர்.மேலும் விசாரணை சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சனம் தலைமையில் நடைபெற்று வருகிறது.
English Summary
A young man who stole jewelry and money from a woman on a moving train do you know what happened in the end?