எருமை மாட்டு மீது மழை பொழிவது போன்ற படத்தை வைத்து நூதன போராட்டம்! - Seithipunal
Seithipunal


பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இரண்டாம் நாள் போராட்டமாக  எருமை மாட்டு மீது மழை பொழிவது போன்ற படத்தை வைத்து நூதன போராட்டம் செய்தனர்.

10 ஆண்டுகள் கடந்த நிலையில் தொடர் கட்ட போராட்டங்கள் நடத்தியும் எருமை மாட்டு மீது மழை பொழிவது போன்ற அலட்சியமாக செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும் சென்னை  உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் பொதுப்பணித்துறை வாரிசுதாரர்கள் ஊழியர்கள் தொடர்ந்த  வழக்கில் மூன்று வாரங்களுக்குள் 53 அரசுத்துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களின் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அந்த பட்டியலில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பெயர் பட்டியலை சேர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் மேதகு ஆளுநர் அவர்கள் நேரடியாக தலையிட்டு தலைமைச் செயலருக்கு உத்தரவிட வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி போராட்டம் நடைபெற்றது.

பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு _ புதுச்சேரி & காரைக்கால் ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி போராட்டம் நடத்தி சென்றனர்,இதையடுத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A modern struggle depicted as rain falling on a bull


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->