சென்னை || வடமாநில கட்டிட தொழிலாளி கொலை, காவல்துறையினர் தீவிர விசாரணை..!
A man murderd in Chennai
வடமாநில தொழிலாளி கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை புதிய வைத்தியநாதன் தெருவில் வடமாநில பலர் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுர்பாத் சர்தார் என்பவரும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று சுர்பாத் சர்தார் வெட்டப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்?, கட்டிடத்தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.