தர்மபுரியில் பெரும் சோகம்!...மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள இளங்காலப்பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்-ஐஸ்வர்யா என்ற தம்பதிக்கு 3 வயதில் அகிலேஷ் என்ற மகனும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ள நிலையில், சதீஷ்குமாரின் மனைவி ஐஸ்வர்யா, தனது தாய் வீடான  எட்டிக்குழி கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையே எட்டிக்குழி கிராமத்தில் குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மினி டேங்கிற்காக அமைக்கப்பட்ட மோட்டார் பழுதாகி நீண்ட நாட்கள் ஆவதாக சொல்லப்படுகிறது. இதனால் அதனை சரி செய்வதற்காக மோட்டாரை கழட்டி சென்ற நிலையில்,  மின்சார ஒயர்கள் ஆங்காங்கே ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருந்துள்ளது.

தொடர்ந்து அந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில், சதீஷ்குமாரின் மகன் அகிலேஷ் கவனக்குறைவின் காரணமாக தொங்கி கொண்டிருந்த மின்ஒயரை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அகிலேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A great tragedy in dharmapuri a 3 year old boy died of electrocution


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->