கரை திரும்பாத 93 மீனவர்களின் கதி என்ன? பீதியில் உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் கரைத்திரும்பாதவர்களின் எண்ணிக்கை தற்போது 93 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பினர் கூறியதாவது, கடந்த 15 தினகளுக்கு முன்பு சின்னத்துரை, வள்ளவிளை, தூத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் பத்தாயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கடந்த வாரம் உருவான கியார் மற்றும் நேற்று உருவான மஹா புயலால் மீன்பிடிக்க சென்ற அனைத்து மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து குஜராத், கோவா, மும்பை கடற்கரைப்பகுதிகளில் தமிழக மீனவர்கள் கரை சேர்ந்தனர்.

ஆனால் 6 விசைப்படகுகளில் சென்ற 78 மீனவர்கள் மட்டும் இது வரை,கரைத்திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கரைத்திரும்பாத மீனவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

93 kanniyakumari fisherman missing


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal