மேட்டூர் அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து.! 8 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

கோவையிலிருந்து பயணிகளுடன் பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது நள்ளிரவு 1 மணியளவில் மேட்டூர் அருகே சென்றபொழுது திடீரென பேருந்து தீ பிடித்துள்ளது. இதையடுத்து தீயானது கொழுந்துவிட்டு எரிந்து பேருந்து முழுவதும் மளமளவென பரவியது.

இந்த தீ விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மேட்டூர் தீயணைப்பு துறையினர் மற்றும் கருகமலைக்கூடல் போலீசார், விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 injured in private Omni bus caught fire near Mettur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->