பூட்டிய வீட்டில் 750 சவரன் நகை கொள்ளை... கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம்..! - Seithipunal
Seithipunal


பூட்டிய வீட்டில்  இருந்து 750 சரவன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறிந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாபர்சாதிக். இவர் புருனை நாட்டில் சூப்பர் மார்கெட் நடத்தி வருவதால் அங்கே குடும்பத்துடன் வசித்து வருகிறார். வெளிநாட்டில் இருக்கும் இவர்கள் அவ்வபோது சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளனர்.

இவர்கள் வெளிநாட்டில் வசிப்பதால் அவரின் அக்கா ஷாயிஷாவிடம் வீட்டை பார்த்து கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார். அவரும் மாலையில் வெளியில் உள்ள விளக்கை போட்டு விட்டு காலையில் அணைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மர்மநபர்கள் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தேடி பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள அட்டைபெட்டியில் 750 சரவன் நகையும் 50 ஆயிரம் பணமும் இருந்துள்ளது. இதனை கண்ட மர்மநபர்கள் அதனை திருடி சென்றனர்.

காலையில் பூட்டு உடைக்கப்படிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் ஜாபர்சாதிக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

750 savaran jewelry robbery in locked house


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->