அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த சிறுவன் பலி.. தஞ்சை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், ஆத்திக்கோட்டை மேற்கு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு திருமணமாகி சபரி என்ற மகன் உள்ளான். சபரி அங்குள்ள பள்ளியில்  2 ம்வகுப்பு படித்து வருகிறான். இன்று கலை விளையாடுவதற்காக சென்ற சபரி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் வீட்டின் பின்புறம் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு, அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மின்சாரம் தாக்கி  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 years old Boy Death In Thanjavur


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->