அரக்கோணத்தில் சிக்கிய ரூ.45 லட்சம் ரொக்கம் - தீவிர விசாரணையில் வருமானத்துறையினர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனை சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.45 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரனையில், திருவள்ளூரில் இருந்து தனியார் வங்கிக்கு பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் வருமானவரித் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் படி வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், வங்கி அலுவலர்களிடம் விசாரனை நடத்தினார். பின்னர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

45 lakhs money seized in arakonam ranipet


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->