சென்னையில் 400 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகள் மீட்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த ராஜா அண்ணாமலைபுரத்தில் பழைய சுவாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை அடிப்படையில் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா, மோகன் தலைமையிலான போலீசார் ராஜா அண்ணாமலைபுரத்தில் 7வது முதன்மை சாலையில் உள்ள முதல் குறுக்குத் தெருவில் சோபா துரைராஜன் என்பவர் வீட்டில் நேற்று சோதனை செய்தனர். 

இந்த சோதனையில் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால விநாயகர், நின்ற நிலையில் அம்மன், இரண்டு துறவிகள் சிலை, ஆண் தெய்வம், சிவன் பார்வதி இணைந்த நிலை, துறவி, சிவன், பெண் தெய்வம், ஆடு தோற்றம் உடையது தனி அம்மன் உட்பட 10க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்டு உள்ளனர். இந்த சாமி சிலைகள் அனைத்தும் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாமி சிலைகளின் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 10 சிலைகளில் விநாயகர் சிலை நாட்டார் மங்கலம் கோவிலில் இருந்து திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அபர்ணா ஹார்ஸ் கேலரியில் இருந்து கடந்த 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் வாங்கப்பட்டதாக சோபா துரைராஜன் தெரிவித்துள்ளார். அதன் உண்மை தன்மை குறித்து தீவிர விசாரணை நடைபெறும் பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

400 years old god idols rescued in Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->