கடலூர்: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் காயம் 
                                    
                                    
                                   4 injured in 2 cars collision in Cuddalore near 
 
                                 
                               
                                
                                      
                                            கடலூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் தோட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (50). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை காரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த மற்றொரு கார் ஒன்று இவரது கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிளில் மீதும் கார் மோதியது. இந்நிலையில் இந்த பயங்கர விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நெல்லிக்குப்பம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
                                     
                                 
                   
                       English Summary
                       4 injured in 2 cars collision in Cuddalore near