உண்டியலில் சேமித்து.. உதவிகளை செய்து  வரும் 3ம் வகுப்பு சிறுமி.! பிரதமர் திட்டத்தின் கீழ் 10 சிறுமிகளுக்கு உதவி.!  - Seithipunal
Seithipunal


வேலூரில் வசிக்கும் ராஜா என்பவர், அதே பகுதியில் சலூன் தொழில் செய்து வருகிறார் .இவருக்கு மைத்ரி வர்ஷினி,மோனிகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில்  மூன்றாம் வகுப்பு படித்து வரும் மூத்த பெண் குழந்தையான மோனிகா சேமிக்கும் பழக்கம் உடையவர். 

சேமிக்கும்  பழக்கத்தை தனது மகள்கள் கற்றுகொள்ள வேண்டும் என்று 
உண்டியல் ஒன்றை ராஜா வழங்கிருக்கிறார். தொழிலில் வரும் பணத்தில் சிறு தொகையை மகளிடம் உண்டியலில் போட சொல்லி தந்துள்ளார். சிறுவயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தில்  முனைப்புடன் இருந்த மோனிகா தொடர்ந்து சேமித்து நல்ல காரியங்களுக்காக செலவு செய்து வந்துள்ளார். 

பிரதமரின் நிவாரண நிதிக்கு, முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.2,200 குடுத்து இருக்கிறார். இத்தகைய நிலையில், சர்வதேச பெண் குழந்தைகள் நாளில் சேமித்து வைத்த பணத்தை செல்வமகள் சேமிப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் பத்து பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு பணமான ரூ.2500 தலைமை தபால் நிலையத்தில் வழங்கியுள்ளார். 

இதுகுறித்து,மோனிகாவின் தந்தை "என் மகள் போலவே சேமிக்கும் பழக்கத்தை அனைவரும் வளர்த்து கொள்ள வேண்டும்." என்று கூறினார். சிறுமியின் இந்த முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து  வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3rd Standard girl Help To 10 Girls


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?


செய்திகள்



Seithipunal
--> -->