தமிழ் கற்க ஆர்வம்; தமிழகம் வந்துள்ள 300 வாரணாசி மாணவர்கள்..! - Seithipunal
Seithipunal


'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சியின் நிறைவாக, வாரணாசி மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அங்கிருந்து 300 மாணவர்கள், தமிழ் மொழியை கற்க ஆர்வமாக தமிழகம் வந்துள்ளனர். 

கடந்த, 20-ஆம் தேதி தமிழகம் வந்துள்ள அவர்களை ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

குறித்த மாணவர்கள், 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, புதுச்சேரி, காந்தி கிராமம், சாஸ்த்ரா, சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்கலை மற்றும் கொங்குநாடு, சுதர்சன் ஜெயின் உள்ளிட்ட கல்லுாரிகளுக்கு அனுப்பப்படுள்ளனர்.

இந்த ஆண்டு, 'தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளில், தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம், கல்வி மரபுகள் உள்ளிட்டவை, வாரணாசி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

இவர்களுக்கு பேராசிரியர்கள், ஹிந்தி மொழி வழியாக, தமிழ் இலக்கண, இலக்கியங்கள், வட - தென் எல்லைகளின் கலாசார ஒற்றுமைகளை கற்பிப்பதுடன், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் அவர்களை அழைத்து செல்லவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி வரும், 31-ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் நிறைவு பெறும். அதில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

300 students from Varanasi have come to Tamil Nadu with an interest in learning Tamil


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->