புதுச்சேரியில் குடிநீரால் 3 பேர் உயிரிழப்பு...! – உண்மை காரணம் என்ன?
3 people die due to drinking water Puducherry What real reason
புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதால், கடந்த மாதம் 20-க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டனர். அண்மையில் மீண்டும் பலர் பாதிக்கப்பட்டு, மூவர் (பூசைமுத்து-43, பார்வதி-65, கோவிந்தசாமி-70) உயிரிழந்தனர்.
இதனால் கடந்த 3 நாட்களில், 70-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன் விளைவாக உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு பகுதிகளில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும், பொதுப்பணித்துறை ஆய்வில், குடிநீர் குழாயில் உடைப்பு காரணமாக கழிவு நீர் கலந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டினர். அதுமட்டுமின்றி,புகார் பலமுறை அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது, குளோரின் அளவை 0.2 பி.பி.எம்-இல் இருந்து 0.4 பி.பி.எம் ஆக அதிகரித்து குடிநீர் வழங்கப்படுகிறது. கூடுதலாக பிளீச்சிங் பவுடர் தெளிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பொதுப்பணித்துறை தரப்பில், குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், சில நாட்களில் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் சுகாதாரத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
English Summary
3 people die due to drinking water Puducherry What real reason