நான்கு நாட்களில் கல்லா கட்டிய ஆம்னி பேருந்துகள்... தமிழகத்தில் மட்டும் 2.15 லட்சம் பேர் பயணம்...!! - Seithipunal
Seithipunal


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். பொதுமக்கள் எளிதில் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. அதேபோன்று ஆமினி  பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக ஆமினி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆமினி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கடந்த ஜனவரி 11ம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 702 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்தப் பேருந்துகளில் 25,276 பயணிகளும், சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் இயக்கப்பட்ட 1,190 ஆம்னி பேருந்துகளில் 42,842 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

அதேபோன்று கடந்த ஜனவரி 12ம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 960 ஆம்னி பேருந்துகளில் 34,592 பயணிகளும், சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் 1,392 ஆம்னி பேருந்துகளில் 50,133 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 13ம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 1,561 ஆம்னி பேருந்துகளில் 56,200 பயணிகளும், சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 2,054 ஆம்னி பேருந்துகளில் 73,948 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

போகி பண்டிகையான நேற்று (ஜன.14) சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 940 ஆம்னி பேருந்துகளில் 33,840 பயணிகளும், சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 1,360 ஆம்னி பேருந்துகளில் 48,960 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 883 பயணிகளை ஜனவரி 11, 12, 13,14 ஆகிய நாட்களில் 4 நாட்களில் பயணித்துள்ளார்கள்" என அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2lakh people traveled in omni buses within 4 days for Pongal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->