2019 ஓர் கண்ணோட்டம்.. 5 புதிய மாவட்டங்கள் உதயம்..!!
2019 overview for 5 new districts
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களாக மாநில அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்துவந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் நிர்வாக வசதிக்காக, மேலும் 5 மாவட்டங்கள் புதிதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
33வது மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசியும்.
34வது மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும்.
35வது மாவட்டமாக வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூரும்.
36வது மாவட்டமாக வேலூர் மாவட்டத்தை பிரித்து ராணிப்பேட்டையும்.
37வது மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டும் தொடங்கப்பட்டது.
இந்த புதிய மாவட்டங்களுடன் சேர்த்து தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி :
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரித்து தென்காசி என்கிற புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
2019ஆம் ஆண்டு 22 நவம்பர் 2019 அன்று தென்காசியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் 33வது மாவட்டமாக துவங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி :
2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி என்கிற புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
2019ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் 34வது மாவட்டமாக துவங்கி வைத்தார்.
திருப்பத்தூர் :
2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து திருப்பத்தூர் என்கிற புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
2019ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அன்று திருப்பத்தூரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் 35வது மாவட்டமாக துவங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை :
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து ராணிப்பேட்டை என்கிற புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
2019ஆம் ஆண்டு 28 நவம்பர் 2019 அன்று ராணிப்பேட்டையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் 36வது மாவட்டமாக துவங்கி வைத்தார்.
செங்கல்பட்டு :
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து செங்கல்பட்டு என்கிற புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
2019ஆம் ஆண்டு 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் 37வது மாவட்டமாக துவங்கி வைத்தார்.
English Summary
2019 overview for 5 new districts