மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி - தமிழக அரசுஅறிவிப்பு.!!
20 lakhs compensation to sanitation worker died family in chennai
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கி அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள கண்ணகி நகரில் இன்று காலை தூய்மைப் பணிக்கு சென்ற வரலட்சுமி என்ற பெண் மழைநீரில் கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க அறிவித்துள்ளது.
அதன் படி தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சத்திற்கான காசோலையையும் அவர் வழங்கினார்.
தொடர்ந்து குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து தரப்படும். வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை தரப்படும். வரலட்சுமியின் 2 குழந்தைகளின் கல்விச்செலவை திமுக ஏற்கும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
English Summary
20 lakhs compensation to sanitation worker died family in chennai